×

கொரோனா தடுப்பு பணி களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரை: இன்று முதல் வழங்கப்படும்

சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மல்டி வைட்டமின் மாத்திரை இன்று முதல் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் தடுப்பு பணியில் தன்னலம் கருதாது களப்பணியாற்றுகின்ற, பொது சுகாதார துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும், நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான முக கவசங்களும், உரிய பாதுகாப்பு உடைகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றிவரும் மேற்கண்ட அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஜிங்க் மாத்திரைகளும், மல்டி வைட்டமின் மாத்திரைகளும் இன்று (27ம் தேதி) முதல் 10 நாட்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்துகள்
* துத்தநாக மாத்திரை (Zinc): 10 நாட்களுக்கு, 150 மிலி கிராம். ஒருமுறை
* வைட்டமின் சி மாத்திரை அல்லது மல்டி வைட்டமின் மாத்திரை: 10 நாட்களுக்கு, 500 மிலி கிராம். ஒரு முறை.
* நிலவேம்பு குடிநீர் மற்றும் கப சுரக்குடிநீர்: 30 மிலி குழந்தைகளுக்கும், 60 மிலி பெரியவர்களுக்கும். ஒரு மாதம், தினமும் காலையில் சாப்பாட்டுக்கு முன் கொடுக்க வேண்டும்.
இந்த மருந்துகளை சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதனால் அவர்கள் வைரசை எதிர்க்கும் தன்மை ஏற்படும். அதனால் அவர்கள் நன்றாக பணியாற்ற முடியும். இதை மேற்கண்ட பணியாளர்கள் பின்பற்ற வேண்டும். இந்த மருந்துகள் அனைத்தும் அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் கிடைக்கும்.

Tags : Corona, tablet, curfew
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...